குரு திருவடி !!
அனைவருக்கும் வணக்கம். அடியேன் சேலத்திலிருந்து S.P.சண்முகசுந்தரம். அடியேன் நமது ஞானகுருநாதர் ஸ்ரீ LLS.மணிகண்டன் அய்யா அவர்களை கடந்த 2006 ம் ஆண்டு முதல் அறிந்திருக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நேரடி வகுப்பில் பங்கேற்கும் வாய்ப்பு 2007ம் ஆண்டு அமைந்தது. அவர் எம்மை சீடராக ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து எமது மெய்யியல் வாழ்வில் முறையான பயணம் சென்று கொண்டு இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரை நமது அய்யா அவர்களை மிகத்தேர்ந்தொரு குரு என்ற அடிப்படையில் உணர்கிறேன். காரணம் அவர் போல் எளிமையாக கற்பிதம் செய்பவர்கள் யாமறிந்த வகையில் யாருமில்லை என்பது அடியேனது கருத்தாக உள்ளது. மேலும் சீடராக ஏற்றுக் கொண்ட நாள் முதல் அவருக்கும் நமக்குமான சூட்சுமமான பந்தமிருகிறதல்லவா அது பூர்வ ஜென்ம பந்தமென கருதத் தோன்றிற்று. என்று அவர் நம்மை அமரச்செய்து தீட்சை கொடுத்து ஆனமக் கணலை தூண்டி விட்டாரோ அன்றிலிருந்து பூர்வபந்தம் புத்தாக்கம் பெற்று தொடர்ந்து கொண்டுள்ளது. அனுதினமும் நமது எண்ணம்,சொல்,செயல் யாவற்றிலும் அவர் நம்மோடே, நம்முள்ளே இருப்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றார். எண்ணும் எண்ணம் தீர்க்கமானதாகவும், உச்சரிக்கும் வார்த்தையில் கவனமும் செய்யும் செயலில் நேர்த்தியும் கொண்ட நபராக நம்மை உருவாக்கி உள்ளார். இதில் ஊழ்வினை காரணமாக எங்கேனும் தடுமாறினாலும் தடம் மாறினாலும் தகுந்த நேரத்தில் மீட்டெடுத்து., மீண்டும் அங்கிருந்து ஆன்மப் பயணம் தொடரும்வண்ணம் காத்திருந்து அழைத்துச் செல்வார். இதனை உள்ளூற உணர்ந்தவர்கள் நம்மில் பலருண்டு.
நாம் சீடராக மேம்பட்டுக் கொண்டுள்ளதை நம்மை நன்கறிந்தவர்கள் நம்மைப் பற்றிய மதிப்பீடு செய்யும்போது உணர்ந்து கொள்கிறோம். அய்யா ஒருமுறை வகுப்பில் தெரிவித்த கருத்து என்னவென்றால் (இதை சொல்வதற்கு முன்பே நான் தற்பெருமைக்காக இதை சொல்லவில்லை என்று சொல்லித் தான் துவங்கினார்) இந்த சத்சங்கத்தில் உள்ளவர்கள் எந்தவொரு ஆன்மீக சபைக்குச் சென்று அமர்ந்தாலும் அந்த சபையில் நீங்கள் மேம்பட்ட நபராகவே திகழ்வீர்கள் அந்த சபையில் நிகழ்த்தப்படும் சத்சங்கத்தின் சாரம் நீங்கள் முன்னமே அறிந்தவையாக இருக்கலாம், அல்லது நீங்கள் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும் வகையில் அது இருக்கும் என்று சொன்னார். அவரின் தீர்க்கமான தன்னம்பிக்கையை பின்நாளில் பலமுறை அது போன்ற சூழல் அமையும்போது எண்ணி எண்ணி வியந்துள்ளேன். நமது சிறப்பினை சூட்டிக் காட்டி யாரேனும் பேசினால், அது நம் குரு நம்மை பன்படுத்தியது தான் காரணம். அதற்க்கான முழு மதிப்பும் நமது ஞானகுருநாதரையே சாரும். இந்த நிலைக்கு நம்மை உயர்த்திய குருநாதருக்கு சிரம் தாழ்த்தி வணங்கிப் பணிகின்றோம். எமக்கு தெறிந்து பதினைந்து ஆண்டுகளாக இந்த “மா நிலமும், மானுடமும்” சிறக்க அவர் ஆற்றிய பணிகள் எண்ணற்றவை தன்நலனுக்கும், குடும்ப நலனுக்கும் வாழும் மாந்தர்க்கிடையே மானுடம் மேம்பட உழைக்கும் நபரை யாரோ சொல்லக் காதார கேட்டிருப்போம். இப்போது கண்ணார கண்டிட்டோம். அவர் அடிபற்றி, அவர் வழி நடப்போம். அனந்தமே ஜெயம். எல்லாம் கைக்கூடும். குருவருள் கைகூட்டுக. நன்றி.